• Apr 15 2026

இதுதான் காலத்தின் கட்டாயம்; அவருக்கு ஓட்டு போடுங்க.! தவெகவுக்கு ஆதரவாக ராமராஜன் பரப்புரை

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட களத்தில் இறங்கியுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். 

விஜயின் பிரச்சாரத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய ஆதரவை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இளம் வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக, நடிகர் ராமராஜன் பரப்புரை மேற்கொண்டுள்ளார் இது தொடர்பாக அவர் தெரிவித்த பிரச்சார கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

அதன்படி அவர் கூறுகையில், என்னன்றி கொண்டாருக்கும் ஒய்ண்டாம் ஒய்வில்லை செய்ன்றி கொண்டார் மகர்ன மாதிரி ஒருத்தருக்கு செஞ்ச எத வேணாலும் மறந்துடலாம். ஆனால் செஞ்ச உதவியை நம்ம மறக்க கூடாது என்ற வகையில் 35 வருஷமா நான் பழகுற என் உறவினரான தம்பியாக இருக்கக்கூடிய டி.பி.வி கனகராஜா அவர்களுக்கும், அவருடைய சகோதரர் டி.பி.வி. வைகுண்டராஜா அவர்களுக்கும், அவருடைய போகின் சக்கரவர்த்திக்கு உங்கள் பொன்னான வாக்குகளை விசில் சின்னத்திலே வாங்க என்று கேட்டு வந்திருக்கின்றேன். 


இது காலத்தின் கட்டாயம். காலத்தின் சூழல். நான் இந்த குடும்பத்தில் 35 வருஷம் ஆழமாக இருப்பது செய்த நன்றி திறன் கைமாறு. 1988ல இருந்து 32 வருஷமா தமிழக முழு சுற்றி அனைத்து மக்களையும் பார்த்து கொண்டிருக்க நடிகர் ராமராஜன் என்று சொல்வதில் நான் கருதப்படுகின்றேன். 

32 வருஷம் ஆச்சு. தமிழகத்துல நான் போகாத ஊர் கிடையாது, நான் காலடி வைக்காத இடம் கிடையாது. அப்படிப்பட்டவன்தான் ராமராஜன். இன்னைக்கு இப்படி வந்திருக்கேன்னா, இதுதான் என் மனதில் இருக்கிற நன்றி உணர்வு. நான் யாரையும் மறக்க மாட்டேன். தமிழக மக்களையும் மறக்க மாட்டேன். அதே மாதிரி எந்தத் தொகுதியாக இருந்தாலும், என் திருச்செந்தூர் தொகுதி மக்களை உயிருள்ளவரையும் மறக்க மாட்டேன். ஏனென்றால் அவர்கள் என்னை எம்பி ஆக்கியவர்கள்.

அதேபோல ஆலங்குளம் தொகுதி, காயல்பட்டணம் மாவட்டம் , இந்த ஆலங்குளம் தொகுதி மக்களை நான் மறக்க மாட்டேன். ஏனென்றால் மிகப்பெரிய இழப்புக்கு அப்புறம் நான் நடித்த படம் சாமானியன், ஒரு சாதாரண படமாக இருந்ததை மிகப்பெரிய வெற்றிப் படமாக ஆக்கி ஆலங்குளம் மல்டிப்ளெக்ஸில் 116 நாள் வெற்றிகரமாக ஓட வைத்தது இந்தப் பகுதி மக்கள். நான் அன்றும் வந்து இன்றும் சொல்கிறேன்,அதற்கு நான் உங்கள் எல்லாருக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தம்பி விபி அவர்கள் எனக்கு தம்பி போன்றவர். நல்ல ஒரு வேட்பாளரை, நல்ல குடும்பத்திலிருந்து, இந்தப் பகுதிக்கு வெற்றி வேட்பாளராக அனுப்பியுள்ளார். அவரை வேட்பாளர் என்று சொல்வதை விட, இந்த மக்களின் காப்பாளர் என்று சொல்லலாம்.

Advertisement

Advertisement