• Apr 26 2024

வாரிசு படத்தில் என்னுடைய ரோல் இது தான்- இருந்தாலும் பரவாயில்லை- குஷ்பு கூறிய லேட்டஸ்ட் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் உருவாகி வரும திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.

தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இபபடத்திலிருந்து இதுவரை மூன்று போஸ்டர்கள்  வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த படத்தில் கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வம்சியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு யாவும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.


இந்த படம் வரும் 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படம் பற்றி நடிகை குஷ்பு  பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். வாரிசு படத்தில் தனது கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் அல்ல என்றும் சிறிய கேமியோ போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறினார். 

மேலும் சிறிய ரோலாக இருந்தாலும்  வாரிசு படத்தில் தான் நடித்துள்ள அனைத்து காட்சிகளிலும் நடிகர் விஜய்யுடன் தனக்கு காம்பினேஷன் காட்சிகள் உள்ளன என்றும் குஷ்பு கூறியுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement