தமிழ் சினிமா, என்பது வெறும் வணிகமே அல்ல. அது யாருக்காவது வாய்ப்பு தந்தால், அவர்களது வாழ்க்கையே மாற்றும் ஒரு மேடையாகவும் அமைகிறது.
அந்த வகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது குரலுடன் திரும்பியுள்ளார் பாடகர் சத்யன், அது மட்டுமல்லாமல் அவரது மனதின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்ட நன்றியும் தற்போது இணையத்தில் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ், சமூக மாற்றங்களை பேசும் கதைகளின் மாஸ்டர். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என ஒவ்வொரு படத்திலும் உணர்வை தூண்டும் கதைகளைக் கொண்டு வந்தவர்.
இப்போது, துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தில் இசை வடிவத்தில் சத்யனுக்கும் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகிய சத்யனின் நன்றி உரை இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்யன் அதன்போது, "நன்றி என்ற ஒரு வார்த்தையில் என் உணர்ச்சியை அடக்க முடியாது… இது என் ரொம்ப நாள் பசி. நான் அவ்ளோ தான்… இனி சினிமா கிடையாது’ன்னு நினைச்சேன். எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி. இந்த பாட்டை எனக்கு கொடுத்ததுக்கு, நீங்க மனசு வைக்கலைன்னா, இது எனக்கு கிடைச்சு இருக்காது." என்று கூறியுள்ளார்.
இந்த ஒரு உரை தான், சினிமாவில் ஒரு வாய்ப்புக்குள் எத்தனை ஏக்கங்கள், எத்தனை துன்பங்கள் அடங்கியிருக்கின்றன என்பதை வெளிக்கொணர்கிறது. இப்படம் அக்டோபர் 17, 2025 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது என்பதும் குறிபிடத்தக்கது.
Listen News!