• May 17 2026

ஜானுவாவே பார்த்தவங்களுக்கு இது ஷாக் தான்.! ‘LIK’ திரைப்பட கரெக்டர் குறித்து கௌரி கிஷன்

shali / 1 month ago

Advertisement

Listen News!

கௌரி கிஷன் சமீபத்தில் ‘LIK’ திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்து பகிர்ந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. “என்னை ஜானுவாகத் தான் பார்த்திருக்காங்க. முதல் முறையாக க்ளாமர் ரோலில் நடித்துள்ளேன்.” என்ற அவரது பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


96 திரைப்படத்தில் ‘ஜானு’ என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த கௌரி கிஷன், தற்போது தனது புதிய முயற்சியால் அனைவரையும் ஆச்சரியப்படுத்த உள்ளார். இதுவரை சீரியஸ் மற்றும் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்திருந்த அவர், இந்த முறை க்ளாமர் ரோலில் நடிப்பது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

LIK திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்துள்ள கௌரி, தனது இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கௌரி கிஷனின் இந்த துணிச்சலான மாற்றம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மொத்தத்தில், இந்த படம் அவரது நடிகை வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement