• Jan 19 2025

’எதிர்நீச்சல்’ பிரச்சனையை மறந்துவிடலாம்.. மீண்டும் சன் டிவியில் திருச்செல்வம்.. ‘கோலங்கள் 2’ உருவாகிறதா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென சேனல் தரப்புக்கும் இயக்குனர் திருச்செல்வம் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சேனல் தரப்பு எதிர்நீச்சல் சீரியலை அவசர அவசரமாக முடிக்க முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் தற்போது சேனல் தரப்பு திருச்செல்வத்தை அழைத்து புதிய சீரியலுக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ’எதிர்நீச்சல்’ சீரியல் முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகிய போதிலும் இன்னும் சமூக வலைதளங்களில் அந்த சீரியல் குறித்து மக்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது அவசரப்பட்டு இந்த சீரியலை முடித்து விட்டோமோ என்று சேனல் தரப்பு வருந்துவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ’எதிர்நீச்சல்’ ரசிகர்களை அப்படியே மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மீண்டும் திருச்செல்வத்தை வைத்து ஒரு சீரியலை ஆரம்பிக்க வேண்டும் என்று சேனல் தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் குறிப்பாக ’கோலங்கள்’ இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



அதற்கு ஒப்புக்கொண்ட திருச்செல்வன் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்ததாகவும் இந்த சீரியலின் கதையில் சேனல் நிர்வாகம் தலையிடக்கூடாது. சீரியலை எப்போது முடிக்க வேண்டும் என்பதை நான் மட்டுமே முடிவு செய்வேன் என்று கூறியதாகவும் அதற்கும் சேனல் தரப்பு ஒப்புக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

எனவே மீண்டும் அபி கேரக்டரில் தேவயானி உள்பட ’கோலங்கள் 2’ சீரியலில் முதல் பாகத்தில் இருந்த அனைவரையும் விரைவில் பார்க்கலாம் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement