• Jan 19 2025

பாண்டியனிடம் இருந்து பேக்கை பிடுங்கிய தங்கமயில்.. ராஜி டியூஷனுக்கு ஆப்பு வைத்த பாக்கியம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்றைய எபிசோடில் அப்பா கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக செந்தில் சென்னையில் தெருவாக அலைகிறார். இந்த நிலையில் மீனா அவருக்கு போன் செய்து ’மாலை சீக்கிரம் வந்து விடுங்கள் வெளியே செல்வோம்’ என்று கூற ’கண்டிப்பாக உனக்கு முன் வந்து விடுவேன்’ என்று செந்தில் கூறுகிறார். ஆனால் மீனா அறையில் வந்து பார்க்கும்போது செந்தில் இல்லை, அப்போது அவர் செந்திலுக்கு போன் செய்தபோது ’அப்பா கொடுத்த வேலை இன்னும் முடியவில்லை, சீக்கிரம் வந்து விடுகிறேன்’ என்று சொல்கிறார்.

அதன் பிறகு அப்பா பாண்டியனுக்கு போன் செய்து ’ஒருவேலை மட்டும் முடியவில்லை, அதை நாளை பார்த்துக் கொள்ளவா? என்று கூற அதற்கு பாண்டியன் கண்டிப்பாக நீ அவரை பார்த்து பணத்தை வாங்க வேண்டும் என்று கூற செந்தில் அதிருப்தி அடைகிறார். ஒரு பக்கம் மீனா காத்திருப்பார் என்ற வருத்தமும் அவருக்கு ஏற்படுகிறது.

இந்த நிலையில் ராஜி டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு பையன் ஆங்கிலத்தில் சந்தேகம் கேட்க, உடனே தங்கமயில் இடம் ’நீங்கள் வந்து சொல்லிக் கொடுங்கள், நீங்கள் தான் ஆங்கிலம் படித்தவராயிற்றே என்று ராஜி கூற தங்கமயில் திருட்டு முழி முழிக்க திடீரென தனது அம்மாவிடம் இருந்து போன் வந்ததாக கூறி தப்பிக்கிறார்.

இதையடுத்து அம்மா பாக்கியத்திடம் இதை கூறிய போது ’டியூஷன் நடந்தால் தானே உனக்கு பிரச்சனை, டியூசனை நடக்க விடாமல் செய்துவிடலாம்’ என்று கூறி அதற்கு ஒரு ஐடியா கூறுகிறார்.

இந்த நிலையில் செந்திலை காணாமல் நீண்ட நேரமாக காத்திருக்கும் மீனா கோமதிக்கு போன் செய்கிறார். அப்போது கோமதி மீனாவின் கதையை கேட்காமல் தங்கமயில் கேரியரில் சாப்பாடு கொண்டு போன கதையை கூற மீனாவும் அதை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன.

இந்த நிலையில் கடையில் இருந்து பாண்டியன் திரும்பி வந்து பேக்கை கோமதி இடம் கொடுக்க அதை தங்கமயில் பிடுங்கி வாங்கிக் கொள்கிறார். அப்போது கோமதி அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement