• Jun 15 2026

வி.ஜே.பார்வதி பற்றி பேச ஏதும் இல்லை! - விஜய் சேதுபதியின் அதிரடி பேச்சு வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகரான விஜய் சேதுபதி, சமீபத்தில் நடைபெற்ற ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, பிக் பாஸ் தொடர் தொடர்பாக பேசிய விஜய் சேதுபதி, "சிம்பு, சூர்யா என அனுபவம் வாய்ந்த நபர்கள் இருக்கும்போது என்னை பிக் பாஸ் தொகுப்பாளராக வாய்ப்பு கொடுத்த ஜியோ ஹாட்ஸ்டார் பிரதீப்புக்கு மனமார நன்றி சொல்கிறேன்" என்று உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

அதேநேரத்தில் வி.ஜே.பார்வதி பற்றி கூறுகையில், "வி.ஜே.பார்வதி பற்றி பேச ஏதும் இல்லை. ஏனெனில் வாரா வாரம் பாரு கிட்ட பேசி சலித்துவிட்டது" என்று சொல்லி சிரிக்கவைத்தார். மேலும், "வி.ஜே.பார்வதி மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் இந்த வெப் சீரிஸை பார்த்த பிறகு உங்களுக்கு அவளை பிடிக்கும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


இந்த தொடரில் நடித்துள்ள முத்து குமரன் பற்றி பேசிய விஜய் சேதுபதி, "முத்து குமரன் இந்த தொடரில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவர் உண்மையிலேயே ஒரு திறமைசாலி. அவரை இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் மணிகண்டனிடம் அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று இளம் நடிகரை மனமார பாராட்டினார்.

விஜய் சேதுபதியின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

Advertisement

Advertisement