• Feb 21 2025

"காதலிக்க நேரமில்லை" பார்க்க தியேட்டரில் ஆள் இல்லை! ரசிகர்கள் கூறும் விமர்சனம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், டிஜே பானு, வினய், யோகி பாபு, லால், லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள  "காதலிக்க நேரமில்லை" இன்று ரிலீஸாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது ரசிகர்கள் விமர்சனம் குறித்து பார்ப்போம். 


ஜெயம் ரவி தனது குழந்தைகள் வேண்டாம் என்று விந்தணுவை சேமித்து வைக்க முடிவு செய்கின்றார். அப்போது ரவியின் விந்தணு தவறுதலாக டோனர் லிஸ்ட்டில் சேர்க்கப்பட, 4 வருஷம் காதல் செய்து ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொள்ளும் நித்யா மேனன் பிரேக்அப் காரணத்தினால் ஆண்களை வெறுத்து குழந்தையை பெற்றுக் கொள்ள கணவன் தேவையில்லை என்று டோனர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார். ரவியின் விந்தணு தவறுதலாக நித்தியாமேனனிடம் சேரவே  இந்த விஷயம் ரவிக்கும் -நித்யா மேனனுக்கும் தெரிய வருகிறதா? என்பதே மீதி கதியாக இருக்கிறது. 


இந்நிலையில் இந்த திரைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இவ்வாறு தமது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். காமெடி சில இடங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. இடையில் சில கதாபாத்திரங்கள் காணாமல் போய் மீண்டும் வருகிறது. திரைக்கதை இடையே சில குழப்பங்கள் எழுகிறது. ரகுமான் சார் நல்லா செய்து இருக்காரு ரொம்ப சூப்பரா பண்ணி இருக்காரு. கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. பிரதர் படத்தினை விட இது பரவாயில்லை என்று கமென்ஸ் கூறிவருகிறார்கள். 

 

Advertisement

Advertisement