• Apr 26 2024

வாரிசு படத்தில் விஜய் பயன்படுத்திய வாட்ச்..விலையை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தில் நடிகர் விஜய் மிகப்பெரிய கோடீஸ்வரராக நடித்துள்ளார்.அதில் அதற்காக பிரத்யேகமாக காஸ்ட்லி வாட்ச் ஒன்றை விஜய் தனது கையில் கட்டி நடித்துள்ளார். தீபாவளி பரிசாக வெளியான அந்த அதிரடியான போஸ்டரில் ரசிகர்கள் கண்களை கவர்ந்த அந்த வாட்ச்சை ரசிகர்கள் ஜூம் அடித்துப் பார்த்து அதன் பெயர் என்ன? அதன் விலை என்ன? என்பதை எல்லாம் கண்டு பிடித்து உள்ளார்கள்


கோடீஸ்வரர் கதாபாத்திரம் என்று சொல்லிவிட்டு சாதாரண கூலிங் கிளாஸையோ, வாட்ச் உள்ளிட்ட பொருட்களையோ அணிந்து கொண்டு நடித்தால் டிராமா மாதிரி தான் இருக்குமே தவிர ரியாலிட்டிக்கு அருகே செல்லும் சினிமாவாக ஒரு போதும் இருக்காது.இவ்வாறு  கமல் உள்ளிட்ட சில நடிகர்கள் ரியல் துப்பாக்கியை தான் சூட்டிங்கிற்கே பயன்படுத்துவர்கள் இந்நிலையில், வாரிசு படத்திலும் விஜய் அந்த பர்ஃபெக்‌ஷனை பக்காவாக செய்துள்ளார்.

கோட் சூட் உடை தொடங்கி விஜய் வாரிசு படத்தில் அணிந்துள்ள அத்தனை உடைகளும் செம காஸ்ட்லியாகவும் ராயலகாவும் உள்ளன.எனினும்  சமீபத்தில் வெளியான ஸ்டில்களை பார்த்து விட்டு இதே போல டிரெஸ் எடுக்க வேண்டுமென தேடி அலைந்த ரசிகர்களுக்கு சில உடைகள் கிடைக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.



இந்நிலையில், விஜய்யின் கையில் கட்டியிருக்கும் வாட்ச் ரோலக்ஸ் வாட்ச்சா என யோசித்து ரசிகர்கள் ஜூம் அடித்து பார்த்த நிலையில், செம காஸ்ட்லியான வாட்ச் அது என்பது தெரிய வந்திருக்கிறது. Patek Philippe Nautilus என்கிற காஸ்ட்லியான வாட்ச்சை தான் நடிகர் விஜய் வாரிசு படத்தில் அணிந்து நடித்துள்ளார்.



அத்தோடு லட்சங்களை கடந்து சுமார் ஒரு கோடிக்கே அருகே இதன் விலை கூறப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக 90 லட்சம் ரூபாய்க்கு இந்த காஸ்ட்லி வாட்ச் கிடைக்கிறது என சமூகவலைதளங்களில் தகவல்கள் உள்ளன. மேலும், இந்த கடிகாரம் அவ்வளவு எளிதில் எல்லோராலும் வாங்க முடியாதென்றும் சிலருக்கு 10 ஆண்டுகள் கூட ஆகிவிடும் இந்த கடிகாரம் கிடைக்க என்றும்  சொல்கின்றனர். ரோஸ் கோல்ட் மற்றும் ஒயிட் கோல்டுகளால் இந்த கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.



வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு என இரு பெரும் படங்கள் மோதி பார்த்து விட முடிவு செய்துள்ள நிலையில், எந்த படம் அதிக தியேட்டர்களை பிடிக்கும் என்றும் எந்த படம் முதலில் வெளியாகும் என்றும் கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் கிளம்பி உள்ளன. இரு படங்களுக்கும் பெரும் வசூல் குவியுமா? அல்லது ஒரு படம் அடிவாங்குமா? என ஏகப்பட்ட கணிப்புகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement