இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். எனினும் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தயங்கினார் என்றும், பின்னர் அவரது தந்தையின் வற்புறுத்தலால் தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் என்றும் அவரது தாய் மது சோப்ரா சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா, மிஸ் இந்தியா மற்றும் மிஸ் உலக அழகி பட்டம் வென்றதன் பின்னர் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்புடன் அறிமுகமானார். அவர் தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடித்திருந்தார்.
மது சோப்ரா மேலும் கூறியதாவது, "பிரியங்கா தமிழில் நடிக்க விரும்பவில்லை என்றதுடன் பாலிவுட்டிலேயே அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்ததாகவும் கூறினார். ஆனால், அவரது தந்தை அசோக் சோப்ரா தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார். அவரது தந்தையினால் தான் பிரியங்கா 'தமிழன்' படத்தில் நடித்தார்" என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "அவரது தந்தை விரும்பியதற்காகவே அவர் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவிற்கும் வாய்ப்பு கொடுத்தார். இல்லையெனில், தமிழ் படங்களில் நடிக்க அவர் முழுமையாக மறுத்திருப்பார்" என உறுதியாகத் தெரிவித்தார். இத்தகவல் சமூக ஊடகங்களில் பரவியதுடன் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Listen News!