• Apr 15 2026

அனிமல் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடிகளா? விமர்சனங்கள் தாண்டி பட்டையை கிளப்பும் ரன்பீர் கபூர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

அண்மையில் திரைக்கு வந்த அனிமல் திரைப்படம்  ஹிந்தியில் எடுக்கப்பட்டு இருந்தாலும், ஏனைய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் அனிமல் பார்க் என்ற பெயரில் உருவாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 


வன்முறை கொஞ்சம் அதிகமாக உள்ள இந்த படம் பெண்களை மட்டம் தட்டும் விதமாகவும் உருவாகியுள்ளது என படம் வெளியான நாளிலிருந்து சோசியல் மீடியாவில் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


இந்த படத்தினை சிலர் புகழ்ந்தாலும் பலர் நேர்மறையான விமர்சனமே தருகின்றனர். ஆனாலும் வசூலை வாரிக் குவித்துள்ளது அனிமல்.

இந்த நிலையில்,  உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.910.72 கோடி என தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement