• Jan 19 2025

டைட்டான லெக்கின்ஸ் பேண்ட்... ஆண் நண்பரை தொடையில் நிற்க வைத்து சாகசம் காட்டிய பிரகதி!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அரண்மனை கிளி' சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை பிரகதி. 

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

தமிழில் பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரகதி, ஒரு சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


தற்போது பட வாய்ப்புக்கள் இல்லை என்றாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தால், ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரகதி, அடிக்கடி போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இந்த நிலையில், உடற்பயிற்சி செய்யும் பொழுது தன்னுடைய தொடையின் மேலே ஆண் நண்பரை நிற்கவைத்துள்ளார் நடிகை பிரகதி. தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

அதாவது, தனது வலுவை பரிசோதிக்கும் விதமாக தன்னுடைய தொடையின் மீது ஒரு வெயிட் பிளேட்டை வைத்து அதன் மீது தன்னுடைய ஆண் நண்பரை நிற்க வைத்து தன்னுடைய சக்தியை பரிசோதனை செய்திருக்கிறார் பிரகதி.


Advertisement

Advertisement