• Nov 28 2025

ரஜினியின் மாஸான கம்பேக்.. "ஜெயிலர் 2" படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் “ஜெயிலர் 2” திரைப்படம், தற்போது பரபரப்பான அப்டேட்டுகளுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியாகிய தகவல்களின் படி, படம் தற்போது சென்னையில் நடைபெற்று வருவதுடன் முக்கிய ஷூட்டிங்கை முடித்து, அடுத்த வாரம் கோவாவில் மிக தீவிரமான, அதிரடி அக்க்ஷன் sequence-களுடன் தொடர்ந்து படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


“ஜெயிலர் 2” படத்தில் ரஜினியின் மாஸான காட்சிகள் நிரம்பியுள்ளன எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், இப்படத்தில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவரது கதாபாத்திரம் ரஜினியின் கதாபாத்திரத்துடன் நேரடியாக மோதும் வகையில், திரையரங்கில் வித்தியாசமான திருப்பங்களை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். 


இதன் மூலம் படத்தின் சஸ்பென்ஸ், தீவிரம் மற்றும் கதை முன்னேற்றம் மேலும் பல மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன், “ஜெயிலர் 2” படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் excitement-ல் ஆட்டம் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement