• Jun 28 2026

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட வைத்த 'முட்டகலக்கி' படைத்த புதிய சாதனை.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநரும் நடிகருமான கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக திகழ்கிறது. இப்படம் உலகளவில் ரூ.82 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதன் மூலம், 2026ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக ‘யூத்’ உருவெடுத்துள்ளது.


இந்த வெற்றிக்குப் பின்னால் முக்கிய காரணங்களில் ஒன்றாக இசையும் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, G. V. பிரகாஷ் குமார் இசையில் உருவான ‘முட்டகலக்கி ’ பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடலை கென் கருணாஸ் தானே எழுதி பாடியிருப்பதும் தனிச்சிறப்பு.

‘முட்ட கலக்கி’ பாடல் வெளியான நாளிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு ஆடிப் பாடி மகிழ்ந்து வருகின்றனர். தற்போது, இந்த பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இது ‘யூத்’ திரைப்படத்தின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதோடு, கென் கருணாஸ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் கூட்டணிக்கு ஒரு பெரிய சாதனையாகவும் அமைந்துள்ளது.


Advertisement

Advertisement