• Sep 10 2024

வெளியான 'ரகு தாத்தா' படத்தின் "எழுந்து நின்று போரிடு" பாடல் !

Thisnugan / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகம் தாண்டி மலையாளம்,தெலுங்கு என ஆரம்பித்து தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற நடிகையான கீர்த்தி நடிப்பதை தாண்டி கதாபாத்திரமாகவே திரையில் வாழ்கிறார் எனச் சொல்லலாம்.

தமிழ்ல சொல்லுங்க சார்.. ஒன்னும் புரியல' மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷின் 'ரகு  தாத்தா' ட்ரைலர்! – News18 தமிழ்

தற்போது இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் 'ரகு தாத்தா' படத்தில் நடித்துள்ள கீர்த்தி சமூக பார்வையுடனான ஓர் கதையில் போல்டான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்துள்ளார்.இந்தி திணிப்புக்கு எதிரான ஓர் கதையில் நடித்திருக்கும் கீர்த்தி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  "இது மொழிக்கு எதிரான படமல்ல திணிப்பிற்கு எதிரான படம்" என்று சிறப்பாக விளக்கமளித்திருந்தார்.

Image

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 15 இல் வெளியாகவிருக்கும் 'ரகு தாத்தா' படத்தின் "எழுந்து நின்று போரிடு" எனும் பாடல் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.ட்ரைலரில் வெளியான காட்சிகளே இப் பாடலிலும் இடம்பெற்றுள்ளது.ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப் பாடலை இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் இணைந்து எழுதியுள்ளனர்.


Advertisement

Advertisement