தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், கொரியோகிராபர் என பல அவதாரங்களில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாக்களில் பணியாற்றி வருகிறார் ராகவா லாரன்ஸ். மறுபுறம் தான் செய்யும் உதவிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒருவராகவும் காணப்படுகிறார்.
அதன்படி தனது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் உண்மையிலேயே மாற்றுத் திறனாளி திறமையாளர்களை ஊக்குவிப்பது, நடன பயிற்சி கொடுப்பது, என்று தனது திரை மறைவிலும் பலரை படிக்க வைத்து உதவிகள் புரிந்து வருகின்றார்.
அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், சிறு வயது முதல் 20 ஆண்டுகள் தான் படிக்க வைத்து வளர்த்த இளைஞர் டிகிரி படித்து முடித்து, அவரும் குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதை பற்றி நெகிழ்ச்சியுடன் கூறி அறிமுகப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், மற்றுமொரு இளைஞன் பற்றி கூறி ரொம்பவும் எமோஷனலாக பேசியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
அதாவது,குறித்த இளைஞன் சிறுவனாக இருக்கும் போது அவருக்கு ஹார்ட்டில் பிரச்சினை இருக்கவே, அவருக்கு உதவி செய்து குணப்படுத்தி உள்ளார் ராகவா லாரன்ஸ். அவர் தற்போது வளர்ந்து வேலைக்கு போய் தன்னால் இயன்ற உதவியை மாற்றுத் திறனாளிகளுக்கு செய்துள்ளார்.
இதனை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ். இதோ அந்த காணொளி,
Action speaks louder than words!
He’s Sastha, from Kanyakumari, who faced a sudden health crisis at the age of 15. While in school, he experienced severe head pain and collapsed. After being rushed to the hospital, it was discovered that he had a heart condition with holes in… pic.twitter.com/UcKGhKuvID
Listen News!