• Jan 18 2025

“தனி ஆளா தவிச்சாலும் இதுவே மேலு..."தனுஷின் குரலில் இரண்டாவது பாடல் வெளியானது..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலக்ஷ்மி கஸ்தூரியுடன், வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்கே புரொடக்ஷன்ஸ் (பி) லிமிடெட் கீழ். பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது.


ஆரம்பத்தில், சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தை இயக்குவதாக  2016 இல் அறிவிக்கப்பட்டது.ஆனால் அது நிறைவேறவில்லை. பின்னர், தனுஷ் திரைக்கதையை கடன் வாங்கி தானே இயக்க திட்டமிட்டார். இது தனுஷின் மூன்றாவது இயக்கத்தில் உருவாகவுள்ள படம் என்பதால் டிடி3 என்ற தற்காலிகத் தலைப்பில் 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது, மேலும் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்பட்டது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளதுடன் ஒளிப்பதிவை லியோன் பிரிட்டோ செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் "கோல்டன் ஸ்பரோவ் "வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியிருந்தது.படக்குழு அறிவித்தது போல் இன்று இரண்டாவது பாடலான 'Kadhal Fail', தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இந்த பாடல் இளைய தலைமுறையின் காதல் தோல்வியை காட்சிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.இப்பாடலினை தனுஷ் எழுதி பாடியுள்ளமை ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.பாடல் இதோ..

Advertisement

Advertisement