விஜய் சேதுபதி என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகரானார்.
மேலும் இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் பிறந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ் படம் டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். தற்போது படத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.
படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததால் தள்ளி வைத்துள்ளனர். இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Listen News!