• Jan 19 2025

இளவரசி வந்து விட்டாள், ரொம்ப சந்தோசமாக இருக்கு- காயத்திரி யுவராஜிற்கு குழந்தை பிறந்தாச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!


'மானாட மயிலாட' என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் காயத்திரி யுவராஜ். இந்த நிகழ்ச்சி மூலம் தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்திய காயத்ரி, பின்னர் மெல்ல மெல்ல சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

சன் டிவி தொலைக்காட்சியில் 'தென்றல்' என்கிற சீரியலில், நிலா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, திறமையான நடிப்பாலும், அழகாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.


அதன்படி இவர் நடித்த சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு, போன்ற சீரியல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.


இவர் யுவராஜ் என்ற நடன இயக்குநரை திருமணம் செய்திருக்கின்றார்.இந்த ஜோடிக்கு தருண் என்கிற 12 வயது மகன் ஒருவனும் உள்ளார். இந்த நிலையில் இத் தம்பதிக்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது.இதனை காயத்திரி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement