• Sep 21 2024

கேன்ஸ் விழாவில் பூஜா ஹெக்டே அணிந்து வந்த செருப்பின் விலை இத்தனை லட்சமா?- ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வியை தழுவியதால் கோலிவுட்டுக்கு முழுக்கு போட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே, அங்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார்.

மேலும் டோலிவுட்டில் அவருக்கு மவுசு அதிகரித்ததை அடுத்து, அவரை நோக்கி கோலிவுட் பட வாய்ப்புகள் தேடி வர விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே. இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

இந்நிலையில், பிரான்ஸில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டே முதன்முறையாக கலந்துகொண்டுள்ளார். மேலும் அங்கு சிவப்பு கம்பள வரவேற்பில் கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட அவர், திரைப்பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அவர் அணிந்திருந்த செருப்பின் விலை அறிந்து நெட்டிசன்கள் ஷாக்காகி போயுள்ளனர்.

அதன்படி பூஜா ஹெக்டே அணிந்திருந்த கருப்பு நிற ஹீல்ஸ் செருப்பு ரூ.43 லட்சம் மதிப்புடையதென கூறப்படுகிறது. இதைக் கேட்டு ஷாக் ஆன நெட்டிசன்கள் சொகுசு கார் விலையில் செருப்பா என ஷாக் ஆகி உள்ளனர்.மேலும் சிலரோ 43 லட்சம் ரூபாய்க்கு அந்த செருப்பில் அப்படி என்ன தான் இருக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர் அணிந்திருந்த ஆடைகளும் லட்சக்கணக்கிலான மதிப்புடையது என கூறப்படுகின்றது.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement