தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய ‘பராசக்தி’ திரைப்படம், தற்போது சென்சார் மற்றும் வெளியீட்டு பிரச்சனைகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம், சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகி உள்ளது. இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதற்கு இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

படக்குழு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 அன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் திரைப்பட ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். காரணம், தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) இன்னும் வழங்கப்படாததால், படம் ரிலீஸ் தேதி மாறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்பொழுது ‘பராசக்தி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!