பிக் பாஸ் தமிழ் 9ம் சீசன், ஆரம்பத்திலிருந்து பல திருப்பங்களையும், சர்ச்சைகளையும், உணர்ச்சிமிக்க தருணங்களையும் கொண்டு தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடங்கியது முதல் பல வாரங்கள் போட்டியாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உறவுகள், சண்டைகள், கூட்டணி மாற்றங்கள் மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்த சீசனில் குறிப்பாக, இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற “பணப்பெட்டி டாஸ்க்” (Money Box Task) மிக முக்கிய ஹைலைட்டாக மாறியுள்ளது. அதாவது இந்த டாஸ்க்கில் 18 லட்சம் ரூபாய் கொண்ட பணப்பெட்டியை கானா வினோத் எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் பெரும்பாலானோர் கானா வினோத்தை இந்த சீசனின் டைட்டில் வின்னராக பார்க்க விரும்பி வந்தனர்.

இந்த நிகழ்வின் பின்னணி குறித்து பல கருத்துகள் வெளியாகியுள்ளன. சிலர், அரோரா அவருக்கு Brain Wash என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கானா வினோத்தின் மனைவி பாக்யா சமூக வலைத்தளங்களில் சில சுவாரஸ்யமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். பாக்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இப்படி எல்லாம் பண்ணித் தான் நீ டைட்டில் வாங்கணுமா?” என்ற வீடியோவை ரீ-போஸ்ட் செய்துள்ளார். இது, பிக் பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!