• Jan 08 2026

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோவை வெளியிட்ட இளைஞரிடம் காவல் துறை தீவிர விசாரணை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய மொழிகளில் இப்போது டாப் இடத்தில் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், புஷ்பா, வாரிசு என்று இவர் நடித்த அனைத்து படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாகும். இப்போதும் இவர் பல படங்களில் நடித்து டிரெண்டிங்கில் இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ என்று கூறிய இணையத்தில் ஒரு வீடியோ டிரெண்டானது. கடந்த சில நாட்களாகவே இணையத்தில் இதுதான் மிகப் பெரிய பேசுபொருளாக இருந்தது.


அந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டில் நுழைவது போல இருந்தது. கருப்பு நிற டிரஸில் ராஷ்மிகா மந்தனா லிப்டில் உள்ளே வருவது போல இருந்த அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. இருப்பினும், அந்த வீடியோ உண்மையில்லை என்றும் யாரோ சிலர் டீப் ஃபேக் (Deepfake) முறையில் அதை உருவாக்கியதும் தெரிய வந்தது. 

பலரும் இது குறித்து தங்கள் அச்சத்தைப் பகிர்ந்தனர். இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டும் என வலியுறுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பலரும் இது குறித்து அச்சம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் ராஷ்மிகா குறித்த போலி வீடியோவை முதலில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 19 வயது பீகார் இளைஞரை டெல்லி காவல்துறை விசாரிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement