• Jan 18 2025

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படத்தின் அடுத்த பாடல் காதல் ஃபெயில் நாளை வெளியீடு!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படத்தில் இருந்து அடுத்த பாடலான "காதல் ஃபெயில்" நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.


இப்பாடலின் சிறப்பு அம்சமாக, தனுஷ் தனது தனித்துவமான கவிதை எழுத்திலும், குரலிலும் பாடலை பாடியுள்ளதுடன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இருவரின் கூட்டணி எப்போதும் ரசிகர்களுக்கு உச்ச களிப்பை வழங்கியிருக்க, இந்த பாடல் காதலின் நுட்பமான உணர்வுகளை பதிவு செய்யும் விதமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


போஸ்டரில் தோன்றும் தனுஷின் தோற்றம் பாடலின் உணர்ச்சியை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.நாளை வெளியாகும் இப்பாடலானது ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement