• Nov 24 2024

ஜானகி நூற்றாண்டு விழாவில் AI மூலம் 'எம்.ஜி.ஆர்' குரல்..!மீண்டும் உயிர்த்தது..

MGR
Mathumitha / 1 hour ago

Advertisement

Listen News!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜானகி ராமச்சந்திரரின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.விழாவின் சிறப்பம்சமாக, புதிய AI தொழில்நுட்பத்தை உபயோகித்து மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தனது குரலில் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவ்விழாவில், AI தொழில்நுட்பம் மூலம் எம்.ஜி.ஆரின் குரல் மீண்டும் உருவாக்கப்பட்டு, அவரது சில முக்கிய அரசியல் உரைகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சியை பார்த்திருந்தவர்கள், எம்.ஜி.ஆர் நேரில் உரையாற்றுவதைப்போல் உணர்ந்தனர். “சாதி, மதம், மொழி கடந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்ற அவரது கருத்துக்களை மீண்டும் கேட்டு, ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


குறித்த காணொளியில் அவர்"எல்லாரும் நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டிங்களா?நான் எப்போதும் உங்கள் இதயத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்,எனது மனைவி ஜானகியின் நூற்றாண்டு விழாவிற்கு எனது ரத்தத்திற்கு ரத்தமான உறவுகள் இணைந்து மாபெரும் விழா எடுத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன் "என கூறியுள்ளார்.இதனை மீண்டும் ஒருமுறை பதிவு செய்வதற்கு பழனிசாமி கோரிக்கை விடுத்தமையினால் மீண்டும் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

விழாவில் பங்கேற்ற தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவரும் இதை மெய் சிலிர்ப்பாகக் கொண்டாடினர். "எம்.ஜி.ஆர் தமிழர்களின் மனசில் என்றும் இருப்பார், இந்த தொழில்நுட்ப சாதனை அதனை மறுபடியும் நிரூபித்துள்ளது" என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement