விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னமருமகள் சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் இரவு பகல் பாராது நடந்த சூட் குறித்து சின்னமருமகள் சீரியல் கதாநாயகன் நவீன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' சீரியல் தற்போது த்ரில்லர் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் கதைபடி ஒரு மலைப் பிரதேசக் காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் சேது எப்படி பாதுகாப்பாக வெளியே வருகிறார். அவரை காப்பாற்ற சென்ற தமிழ் யானையிடம் மாட்டிக்கொள்கிறார். இருவரும் பாதுகாப்பாக வெளியே வந்து விடுவார்களா என்ற எதிர்பார்ப்பில் ஒளிபரப்பாகி வந்தது. இது குறித்து சமீபத்திய பேட்டில் பேசிய நவீன் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில் " டிராவல் பண்ண போகுதுன்னு தெரிஞ்சதுமே ஒரு த்ரில்லான எதிர்பார்ப்பு வந்துவிட்டது. பொதுவா சீரியல் ஷூட்டிங்னா சென்னையை விட்டு வெளியில அவ்வளவா இருக்காது. சம்மர் நேரங்கள்ல சில சீரியல்கள் கோடை வாசஸ்தலங்கள்ல நடக்கும். ஆனா நாங்க நல்ல குளிர்காலத்துல ஏற்காடுக்குக் கிளம்பிட்டோம். பனி பெய்கிற நேரம் விடிகாலையிலதான் லொகேஷனுக்கு போய் இறங்கினோம். உயரமான மரங்கள் அடர்த்தியா இருந்த காடு, அதுக்குள்ள இருந்து அப்பப்ப கேட்டுக்கிட்டே இருந்த வன விலங்குகளின் சத்தம் எல்லாமே திகில், பீதினு த்ரில்லிங்கான அனுபவத்தையும் தந்தது என்று கூறினார்.
மேலும் பேசுகையில் " பாறையில வழுக்குகிற காட்சி, மரத்துல இருந்து விழுகிற மாதிரியான காட்சின்னு எனக்கான சீனும் ரொம்பவே திக் திக் அனுபவத்தைதான் தந்திச்சு. இதுவரை என் நடிப்பு கரியர்ல இந்த மாதிரி அனுபவத்தை நான் சந்திச்சதில்லை. அதுவும் தொடர்ந்து அப்படியொரு கிளைமேட்ல இருந்ததால் காய்ச்சல் வந்திடுச்சு. அதோட அட்டைப்பூச்சிகளின் கடி. ஆனாலும் போயிருந்தவங்கள்ல ஒருத்தருக்கு கூட எந்தவொரு பாதிப்பும் வராதபடி பார்த்துக்கிட்டாங்க. மறக்க முடியாத அனுபவமா இருந்துச்சு என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Listen News!