• Jun 27 2026

போர் தொழில் இயக்குநரின் வெறித்தனமான சம்பவம்! - 'கர' டிரெய்லரில் ஒளிந்திருக்கும் ட்விஸ்ட்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

'கர' திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், அதன் டிரெய்லர் வெளியீடு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ நாயகியாக இணைந்துள்ளார்.

மேலும், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் G. V. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கவனித்துள்ளார்.


வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘கர’ படம், டிரெய்லர் வெளியீட்டின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. டிரெய்லரில் காணப்படும் காட்சிகள், கதையின் தீவிரத்தையும், தனுஷின் வித்தியாசமான கதாபாத்திரத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இதே சமயம், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு மூலம் ‘கர’ படம் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement