• Apr 02 2025

கோபியை உதறித்த தள்ளிய உயிர் நண்பன்! ஜெனிக்கு புது மாப்பிள்ளை பார்க்கும் ஜோசெப்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஜெனியை காரில் செழியன் கூட்டிக் கொண்டு வருகிறார். அவருடன் பேச முற்பட, ஜெனி எதுவும் பேசாமல் இருக்கிறார். வீட்டுக்கு போனதும் இதை பார்த்து ஜோசெப் ஜெனியை திட்டுகிறார். மேலும் உனக்கு டிவோஸ் எடுத்துட்டு நல்ல ஒரு பையனா கல்யாணம் பண்ணி வைக்க போறேன் என சொல்ல, எனக்கு கல்யாணம் என்ற பேச்சே வேணாம் என சொல்லி செல்கிறார்.


மறுபக்கம் கோபியின் நண்பர் செந்தில் கடும் கோபத்தில் கோபியை திட்டுகிறார். உன்னால என் மானம் போச்சு காசும் போச்சு என சரமாரியாக திட்டி செல்கிறார்.

இதை தொடர்ந்து இனியா ரெஸ்டாரண்ட் போட்டோவை எல்லாருக்கும் காட்டுகிறார். அதில் கோபி இருப்பதை பார்த்து ராதிகா ஷாக் அடைகிறார்.

அதன்பின் அந்த போட்டோவை கோபியிடம் காட்ட, அது நான் இல்லை அது கிராஃபிக் என கடவுள் சத்தியம் பண்ணுகிறார். அவர் பொய் சொல்வதை பார்த்தது அவருக்கு அடிக்கிறார். இதை இனியா கவனிக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement