• Dec 04 2023

'தளபதி 68' பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்! பாலைவனத்தில் அப்படியொரு மாஸ் ஸ்டில்ஸ்?

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிவரும் 'தளபதி 68' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள தெலுங்கு பட நடிகை மீனாட்சி சௌத்ரியின் லேட்டஸ்ட்  போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கொலை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார். 


இந்த நிலையில், தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக தெலுங்கு பட நடிகை மீனாட்சி சௌத்திரி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

அத்துடன், மீனாட்சி சவுத்ரி ஒரு இந்திய நடிகை என்பதோடு அழகுப் போட்டி வெற்றியாளர் ஆவார். மேலும், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.  தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement