கேரளா திரையுலகில் அண்மையில் வெளியான 'ஹேமா கமிட்டி அறிக்கை' காரணமாக ஒட்டுமொத்த மலையாள திரை உலகமே அதிர்ச்சியில் காணப்பட்டது. சுமார் 15 பேர் கொண்ட கும்பலின் பிடியிலிருந்து இருந்து வந்ததாக நடிகைகள் பலரும் குற்றம் சாட்டி வந்துள்ளார்கள்.
அதாவது அரைகுறை ஆடைகளில் நடிக்க வைப்பது, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகளில் 20க்கும் மேற்பட்ட தடவை ரீ டேக் வைத்து வேண்டும் என்றே கட்டாயப்படுத்துவது போன்ற உடல் ரீதியான தொல்லைகளை மலையாள திரை உலகில் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வந்ததாக குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மலையாள திரை உலகில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக அம்மா சங்கத்தின் உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்து உள்ளார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரை உலகை சேர்ந்த இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் சித்திக் ஆகிய இருவர் மீதும் முதலில் இந்த புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் சித்திக் உடனடியாக தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன் பின்பு ஜெயசூர்யா, முகேஷ், இடவேளா பாபு உள்ளிட்டார்கள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இவ்வாறான சூழலிலேயே அம்மா சங்கத்தின் தலைவரான மோகன்லால் உட்பட அதன் 17 உறுப்பினர்கள் மொத்தமாகவே தமது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் மோகன்லால் சில திலகங்களுக்கு முன்புதான் மூச்சுத்திணறல் காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவரும் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!