• Sep 09 2024

மீண்டும் கோபியுடன் ஒட்டிக்கொண்ட ஈஸ்வரி.. இது நியாயமா? வைரல் போட்டோஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிஆர்பி ரேட்டிங்கில்  மூன்றாவது இடம் மட்டும் முன்னேறி இருந்தது.

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது ராமமூர்த்திக்கு எண்பதாவது பிறந்தநாளை கோவிலில் வைத்து மிகச் சிறப்பாக பாக்கியா செய்கின்றார். அதற்கு தமது உறவினர்கள், நண்பர்கள் என  அனைவரையும் அழைத்து சிறப்பித்து இருந்தார்.

ஆனாலும் கோபிக்கு இந்த விஷயத்தை பற்றி தெரியாது. இருந்தபோதிலும் செழியனிடம் அவர் கேட்டு தெரிந்து கொண்டு ராமமூர்த்தியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று அசிங்கப்படுகின்றார்.

அவரை ராமமூர்த்தியும் ஈஸ்வரியையும் வெளியே போகுமாறும்  எமக்கு நீ பையனில்லை, எங்களுக்கு ஒரே மகள் தான் அது பாக்கியா தான் என அவரை அவமானப்படுத்தி பேசி இருந்தனர். எனினும் கோபி வெளியே போகாமல் பாக்கியா அங்கு சிரித்து  பேசுவதை பார்த்து வயிறு எரிந்து இருக்கின்றார்.


இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்கள் இது வைரல் ஆகியுள்ளது.

அதாவது குறித்த புகைப்படத்தில் கோபி, ஈஸ்வரி மற்றும் செல்வி ஆகியோர் இருக்கின்றார்கள். அதில் கோபி ஈஸ்வரியுடன் மிகவும் சந்தோஷமாக தோல் மீது கையை போட்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் ஈஸ்வரி உடன் கோபி சமாதானமாக போய்விட்டாரா எனக் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement