• Jan 19 2025

அசோக் செல்வனிடம் ட்விஸ்ட் வைத்த பேட்டியாளர்கள்! கீர்த்தியும் இன்னும் அத பாக்கலையாம்.! தரமான சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்திரி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் சபாநாயகன்

சபாநாயகன் திரைப்படக்குழுவினரை சந்தித்த செய்தியாளர்கள், நடிகர்  அசோக் செல்வனிடம் பல கேள்விகளை கேட்டனர் அதற்கு இவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 


அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவர் என்பதோடு, அவர் தனது தனித்துவமான கதை தேர்வின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். 

இவ்வாறான நிலையில், நடிகர் அசோக் செல்வன், தற்போது இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயனுடன் 'சபாநாயகன்' படத்திற்காக அவருடன்  கைகோர்த்துள்ளார்.


இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சபாநாயகன் படம் தொடர்பாக அசோக் செல்வனிடம், உங்களுடைய soulmate யார் என்று  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அசோக் செல்வன் தரமான பதில் ஒன்றை கூறியிருக்கின்றார்.

அதாவது என்னுடைய soulmate வேறு யாருமில்லை. என்னுடைய காதல் மனைவி தான்னு சொல்லி இருக்காரு.. அதோட ஒரு சிலருக்கு தான் காதல் என்றது கிடைக்கும். அதுவும் திருமணத்தில போய் முடியுமா என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆனா அது எனக்கு நல்லபடியா நடந்து முடிந்தது என்று ரொம்ப சந்தோஷமா கூறியிருந்தாரு அசோக் செல்வன்.

Advertisement

Advertisement