• Jun 04 2023

முகத்தைக் காட்டாமல் முதுகை மட்டும் காட்டி சமாளித்த இயக்குநர்- விஜய் சேதுபதியின் ஹிட் படத்தில் நடந்த சம்பவம்

stella / 1 month ago

Advertisement

Listen News!


தமிழில் அதிகமாக வெற்றி படங்கள் கொடுத்து வரும் கதாநாயகர்களில் விஜய் சேதுபதி முக்கியமானவர். அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை காட்டிலும் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு உருவாகி வருகிறது எனவே அவர் இனி வில்லனாக நடிக்கிற படங்களில் எல்லாம் அதிக சம்பளம் வாங்க உள்ளதாக சில தகவல்கள் உலா வருகின்றன.

விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார் அதில் தென்மேற்கு பருவக்காற்று விஜய் சேதுபதிக்கு முதல் படமாகும். அது சீனு ராமசாமிக்கு இரண்டாவது பாடமாகும்.தர்மதுரை படத்தில் நடந்த ஒரு தவறையும் அதை எப்படி சீனு ராமசாமி கையாண்டார் என்பதையும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 


தர்மதுரை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கு தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர் நடித்திருப்பார். அந்தப் படத்தில் எம்.எஸ் பாஸ்கருக்கு குறைவான காட்சிகளே இருந்தன. எனவே அந்தப் படத்தை சீக்கிரமாகவே நடித்து கொடுத்துவிட்டு அடுத்த படத்திற்கு நடிக்க சென்று விட்டார் எம்.எஸ் பாஸ்கர். அவர் அடுத்து நடிக்கும் படத்திற்காக தனது தாடியை ஷேவ் செய்துவிட்டார். ஆனால் தர்மதுரை பட கதையின் படி அவர் தாடி வைத்திருப்பார்.


இந்த நிலையில் தர்மதுரை படத்தில் எம் எஸ் பாஸ்கர் வரும் ஒரு காட்சியை எடுக்க மறந்துவிட்டார் சீனு ராமசாமி எனவே எம்.எஸ் பாஸ்கரை அழைத்து அந்த காட்சியை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். தாடி எல்லாம் எடுத்திட்டேனே சார் என பதில் கூறியுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.சரி வாங்க சமாளிக்கலாம் என அழைத்த சீனு ராமசாமி எம்.எஸ் பாஸ்கரின் முகமே தெரியாமல் அந்த காட்சியை படமாக்கி இருந்தார் இதை இதை அவர் பேட்டியில் கூறும்போது அது அவர் கண்ணீர் விடுவது போன்ற காட்சி. ஆனால் அவர் முகத்தை காட்ட முடியாது என்பதால் தனது முதுகை குழுக்கி அந்த அழுகையை படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் என கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement