• Sep 29 2026

சம்பவம் ஆரம்பம்! வேட்டையை துவங்கிய "வேட்டையன்"... ப்ரீ புக்கிங் வசூல்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய சினிமாவின் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்திற்காக வெளிநாட்டில் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது.


இதில் இதுவரை ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வசூல் குவிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீசாகுவதற்கு முன்னர் நல்ல வசூல் வேட்டையை வேட்டையன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement