• May 20 2024

விஜய்க்கும் பிரதீப்பிற்கும் இடையில் முற்றிய வாக்குவாதம்... கலவரமாக மாறப்போகும் BiggBoss வீடு.. வேடிக்கை பார்க்கும் கூல் சுரேஷ்... சூப்பரான ப்ரோமோ வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7இன் இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோவில் விசித்திராவிற்கும், ஆனந்திற்கும் இடையே சிறிய வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.


இதனையடுத்து தற்போது 2-ஆவது ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் பிரதீப் ஆண்டனி விஜய் வர்மாவைப் பார்த்து "விசித்ராவும் யுகேந்திரனும் போய்ட்டு கிச்சனில் ஹெல்ப் பண்ணும் போது நீங்க ஒரு கேப்டனாக பார்த்திட்டே இருந்திருக்கீங்க" என்கிறார்.


பதிலுக்கு விஜய் வர்மா "உங்க கேள்விக்கு எனக்கு ஆன்சர் பண்ணனும் என்று அவசியமில்லை" என்கிறார். பின்னர் பிரதீப் ஆண்டனி "சப்பாத்தி குருமா டிஸ்கஸ் பண்ணாமல் ஏன் எழுதினீங்க" என்கிறார். பதிலுக்கு விஜய் வர்மா "நேற்று நாங்க டிசைட் பண்ணும் போது நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க, நாங்க எல்லாரும் டிஸ்கஸ் பண்ணும் போது இதே பொசிஷனில் டவல் ஆட்டிட்டு இருந்தீங்க" என்கிறார். இதனை கூல் சுரேஷ் வேடிக்கை பார்த்து விட்டு செல்கின்றார்.


இதனையடுத்து கிச்சன் பக்கமாக சென்ற பிரதீப் ஆண்டனி "இன்றைக்கு நைட் எனக்கு சிக்கன் 5 வேணும்" என்கிறார். நிக்சன் "சிநாக்ஸ் மட்டும் தான் நீங்க எப்ப கேட்டாலும் பண்ணிக் கொடுக்க முடியும்" என முகத்தில் அடித்தால் போல் கூறுகின்றார்.


இதனையடுத்து பிரதீப் ஆண்டனி "நான் வாங்கின சாமானுக்கு என்கிட்ட பில் இருக்கு அதை எங்கிட்ட கொடுத்திடுங்க" என்கிறார்.  இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement