• Oct 22 2024

தலைவர் 170- திரைப்படத்தின் புதிய அறிவிப்பு... அடடே இவரும் இருக்காரா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாக உள்ள 170-வது  திரைப்படம் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் இரண்டு வாரங்களில் 525 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தற்போது தலைவரின் 170 படத்தில் இணைய உள்ள நடிகர்கள் குறித்து தகவல்கள் வெளியாகிறது. 


லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள தலைவர் 170 படத்தை தசெ ஞானவேல் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் நானி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் தற்போது ரஜினிகாந்தின் 170 திரைப்படத்தில் ராணா டக்குபதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த செய்தி ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இவரை சேர்ப்பதன் மூலம் ரசிகர்களிடத்தே இன்னும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது தலைவர் 170 திரைப்படம். இன்னும் வேறு யார் படத்தில் இணையா போகிறார்கள் என்று பார்ப்போம். 


Advertisement