• Aug 08 2025

மீண்டும் இணைந்த "கரகாட்டக்காரன்" கூட்டணி..! ரசிகர்களுக்கு கிடைத்த குட்நியூஸ்.. படுவைரல்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர்களாக இசையின் இளவரசர் இளையராஜா மற்றும் கிராமத்து காதல் கதைகளின் நட்சத்திரமான நடிகர் ராமராஜன் ஆகியோர் விளங்குகின்றனர். இந்த இருவரும் சேர்ந்து உருவாக்கிய சினிமா அதிசயம் தான் ‘கரகாட்டக்காரன்’ (1989). அந்த நேரத்தில் மக்கள் மனங்களில் எப்போதும் பசுமையாக இருந்த இந்தக் கூட்டணி, இப்போது மீண்டும் ஒருமுறை இளையராஜாவின் 82வது பிறந்த நாளில் இணைந்து பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிவது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.


2025 ஜூன் 2ம் திகதி, உலக இசை ரசிகர்கள் காத்திருந்த தருணம் தான் இளையராஜாவின் 82வது பிறந்த நாள். சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரது ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வாழ்த்துத்  தெரிவித்தனர். இதில் அனைவரையும் வியக்க வைத்தவர் நடிகர் ராமராஜன்.

இளையராஜாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ராமராஜன். அதன்போது, "கரகாட்டக்காரன்" படத்தினை ரீ- ரிலீஸ் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். இருவரும் சந்தோஷமாக அரட்டை அடித்த காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகியுள்ளது.


இருவரும் மீண்டும் சந்தித்த போட்டோ வெளியானதும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், "ராமராஜன் – இளையராஜா ரீயூனியன் நம்ம கனவு" என கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். இளையராஜாவின் 82வது பிறந்த நாளில் ராமராஜன் நேரடி வாழ்த்துத் தெரிவிப்பதென்பது, தமிழரின் இசை பாசத்திற்கும், நடிப்பு மரபிற்கும் இடையே ஒரு புனிதமான இணைப்பு போல இருந்தது.

Advertisement

Advertisement