• Jul 18 2025

தமிழர்களின் எந்திரன்..! மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவரைப் பாராட்டிய வைரமுத்து..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இந்தியாவின் தொழில்துறையில் தமிழர்கள் உயரிய இடங்களை எட்டுவது பெருமை தரும் தருணம். அதிலும் உலகளவில் மின்னணு வாகனப் புரட்சி நடைபெறும் நேரத்தில், மஹிந்திரா & மஹிந்திரா குழுவின் எலக்ட்ரிக் வாகன பிரிவின் நிர்வாக இயக்குநராக உள்ள வேலுசாமி, தமிழர் என்பதை அறிந்த போது நம் நெஞ்சம் பெருமையால் பெரிதாகிறது.


இந்தப் பெருமையை இன்னுமொரு மடங்கு உயர்த்தியுள்ளார் கவிஞரும், தமிழரின் உணர்வுச் சிந்தனையாளருமான வைரமுத்து. சமீபத்தில் X தளத்தில் அவர் பதிவிட்ட பாராட்டுச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


வேலுசாமி கடந்த இரண்டு தசாப்தங்களாக மஹிந்திரா குழுவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றார். அவரது தலைமையில் Mahindra இப்போது EV தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது. 2025ல் வெளியிட உள்ள பல எலக்ட்ரிக் சாதனங்களுக்கு அவருடைய தொழில்நுட்பக்  கணிப்புகள் முக்கிய பங்களிப்பாக இருக்கின்றன. அத்தகைய திறமையாளரை தற்பொழுது வைரமுத்து பாராட்டிய செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement