• Sep 20 2024

ஊர்வசி நடிக்கும் ஜெ.பேபி படத்தின் முதல் பாடல் வெளியானது …!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகும் ஜெ.பேபி படத்தில் ஊர்வசி மற்றும் தினேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் லொள்ளு சபா மாறன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் சேதுமாதவன் ஒளிப்பதிவில் ஜெ.பேபி திரைப்படத்துக்கு சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பு செய்ய, டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

நீலம் புரோடக்சன்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் & லிட்டில் ரெட் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ஜெ.பேபி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றது.

நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்மான குடும்ப கதையாக இப்படம் உருவாகி வருகின்றது. எனினும் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நெடுமரம்’ என தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அம்மாவின் பாச பிணைப்பை வெளிப்படுத்தும் இந்த பாடல் அன்னையர் தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் உமாதேவி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை பிரதீப்குமார் மற்றும் ஆன்னி இணைந்து நன்றாக பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement