• Jul 27 2024

சிரிக்க வைக்க மீண்டும் கூட்டணி அமைக்கும் விமல்... ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் First Look வெளியீடு...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

விமல் நடிப்பில் இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் நல்லதொரு நகைச்சுவைப் படமாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய சூப்பரான அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. 


“தீபாவளி”, “மனம் கொத்தி பறவை” எனும் பல நகைச்சுவைப் படத்தை இயக்கி வெற்றியுடன் அடுத்த ரவுண்டுக்குத் தயாரானார் இயக்குனர் எழில். விமலும் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து நகைச்சுவைப் படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.


இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து தேசிங்கு ராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. விமலுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். சூரியும், ரவி மரியாவும் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு திரையரங்கமே சிரிப்பொலியில் நிரம்பியிருந்தது.


இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நடிக்கிறார்கள். மேலும் குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


தேசிங்கு ராஜா படத்தின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது கடந்து படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. 


Advertisement

Advertisement