• Jan 18 2025

வீட்டை விட்டு ஓடிவரும் ராஜீ... மேலும் 200 பேருக்கு சமைக்க சொல்லும் மேனேஜர்... குழம்பி போய் நிற்கும் பாக்கியா... விறுவிறுப்பான கட்டத்தில் வெளியாகிய ப்ரோமோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மகா சங்கமம் என்று இரண்டு கதைகளை இணைப்பது வழக்கம். அப்படித்தான் தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமமாக ஒளிபரப்பாகிறது. அந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. 


ராஜி வீட்டில் இருந்து தனது காதலனுடன் ஓடி வந்து விடுகிறார். அப்போது அவர்கள் வந்து சேரும் இடம் பாக்கிய குடும்பம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்கி உள்ள ஹோட்டல். ராஜீவின் காதலர் அவளை வலுக்கட்டாயமாக ஹோட்டல் ரூம்க்கு அழைத்து செல்கிறார். அங்கு வந்த பாக்கியா அதனை பார்க்கிறார். 


பிறகு மீட்டிங்கு வருபவர்களுக்கு சமையல் முடிந்து விட்டதா என கேட்ட எல்லாம் ஓகே என சொல்ல அப்போது மேனேஜர் வந்து சொன்னதுக்கு மேல இன்னும் 200 பேர் கூடுதலாக வந்து இருக்காங்க அவங்களுக்கும் சேர்த்து சமைச்சிருங்க என்று கூறுகிறார்.


அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். மறுபடியும் எல்லாருக்கும் சமைக்கணுமா என அனைவரும் குழப்பி இருக்கின்றனர். இனி என்ன நிகழ போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம். 

 

Advertisement

Advertisement