• Sep 19 2024

அட்லி மற்றும் ஷாருகான் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. இப்படம் பலராலும் வரவேற்கப்பட்டதோடு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இந்த மூன்று திரைப்படங்களும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

மேலும் சமீபத்தில் கூட இயக்குநர் அட்லி பிகில் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழுநீள திரைப்படம் வேண்டும் என பதிவிற்கு "பண்ணிட்டா போச்சு" என பதிலளித்து இருந்தார்.

இதற்கிடையே அட்லி தற்போது ஷாருக் கான் படத்தை இயக்கி வருவது, அனைவரும் அறிந்த விஷயம். இப்படம் பல்வேறு காரணமாக தள்ளிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அப்படத்தின் டைட்டில் ஜவான் என தகவல் வெளியாகியிருக்கிறது. நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement