• Sep 19 2024

மறைந்த பிரபல பாடகர் கே.கே-இன் இறுதி சடங்கு வெர்சோவா தகன மையத்தில் நிறைவேற்றம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல பாடல்களைப் பாடி பிரபல்யமான பாடகராக வலம் வந்தவர் கிருஷ்ண குமார். இவர் 2022.05.30 அன்று காலமானார். இவருடைய அகால மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொல்கத்தாவில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற கே கேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவருடைய மரணத்திற்கு அரசியல் வாதிகளும், தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், நண்பர்களும் தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகர் கே கே -இன்உடலுக்கு மேற்கு வங்க விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையை செய்யப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல் துறை வழக்குபதிவு செய்து கே கே-இன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.பின்னர் அவரது உடல் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது மற்றும் இறுதிச்சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் வெர்சோவாஇந்து மயானத்தில் தொடங்கியுள்ளது.அவரது உடல் முன்னதாக அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இன்று தகனம் செய்யப்படும் நிலையில் கே கே-இன்திரையுலகம் மற்றும் இசைத்துறை சகாக்கள் இறுதிச் சடங்கிற்கு வந்து பாடகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கே கே-இன் மனைவி ஜோதி மற்றும் அவர்களது மகன் நகுல் ஆகியோர் தகனம் செய்யும் இடத்தில தங்கள் உறவினர்களுடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement