• Jan 19 2025

சபதம் எடுத்த இயக்குநர் சுசீந்திரன்! சாதித்துக்காட்டிய டீம்... கொண்டாட்டத்தில் படக்குழு..

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுசீந்திரன் சபதம் எடுத்து முடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுவிழாவை கொண்டாடியுள்ளது. 2K லவ்ஸ்டோரி டீம். City light pictures தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, "2K லவ்ஸ்டோரி ' படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது.


படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில், இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது.


புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement