• Jul 27 2026

‘முதல்வன்’ இப்போது நிஜத்தில்.. முதலமைச்சரின் ஆட்சியைப் புகழ்ந்து தள்ளிய நடிகர்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக அந்த முக்கிய நாற்காலியில் அமர்ந்தபோது, அந்த தருணம் தன்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தனது நினைவில் முதலில் தோன்றியது, ‘முதல்வன்’ திரைப்படம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.


சினிமா துறையில் இருந்து வந்த ஒருவர், அதிலும் தன்னுடன் நடித்த ஒருவரே, அரசியல் களத்தில் நுழைந்து முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராக உயர்ந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும், இது தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என்றும் அர்ஜுன் பாராட்டியுள்ளார். இப்படியான உயர்வு சாதாரணமானது அல்ல; மக்கள் நம்பிக்கையை பெறும் அளவுக்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து, பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக “முதல்வன்” திரைப்படத்துடன் இந்த அரசியல் வெற்றியை ஒப்பிடுவது சுவாரஸ்யமாக இருப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.

விஜய்யின் இந்த புதிய அரசியல் பயணம் குறித்து திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அர்ஜுனின் இந்த பாராட்டும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement