• Jan 13 2026

ரவிக்காக மட்டுமே பராசக்தி ஓடும்.. காட்சி முழுவதும் அவர் தான் ஹீரோ.! - கெனிஷா

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய புதிய படைப்பு ‘பராசக்தி’ தற்போது திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், 1960-ம் ஆண்டுகளில் நடந்த முக்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சிவகார்த்திகேயனைத் தவிர, ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.


‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து, படத்தின் கதைக்களம், காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பராசக்தி படத்தை பார்த்த பிறகு நடிகர் ரவி மோகன் பற்றிய விமர்சனம், அவரது தோழி கெனிஷா வழங்கிய பேட்டியில் வெளியாகியுள்ளது. அதாவது கெனிஷா அதன்போது, “ரவிக்காக மட்டும் தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ண மாதிரி இருக்கு. ஹீரோவா பண்ணா என்ன... வில்லனா பண்ணா என்ன.. அவர் தான் நம்பர் 1 இந்த படத்துல.. Second Half-ல அவர தாண்டி படமே இல்ல. அவர் எப்பவுமே Evergreen.. Ever Best.” என்று கூறியுள்ளார். 

இந்த பேட்டி, ரவி மோகனின் நடிப்பு திறமை மற்றும் அவரது காட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு முக்கியத்துவம் பெறுவதால், ரவிமோகன் ரசிகர்கள் மேலும் உற்சாகமாக இருக்கின்றனர்.

Advertisement

Advertisement