• Sep 19 2024

ஜெயிலர் படத்தில் அந்த கமெடி நடிகரா-வெளியான சூப்பர் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் ரஜனி நடிக்கிற திரைப்படம் தான் ஜெயிலர்.இப் படம் குறித்த அறிவிப்பு கடந்த பெப்ரவரி மாதமே வெளியிடப்பட்டாலும், அப்படத்தின் ஷூட்டிங் தற்போது தான் ஆரம்பமாகி உள்ளது. 

ஆக்ஸ்ட் 10-ந் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ரஜினி வருகிற ஆகஸ்ட் 22-ந் தேதி தான் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதுவரை இதர நடிகர், நடிகைகள் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதிப்படுத்தினார். இதுதவிர வில்லனாக பிரபல கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இதுதவிர நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் தமன்னா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.



இந்நிலையில் படத்தில் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நெல்சனின் அனைத்து படங்களிலும் யோகி பாபு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஜினியோடு தர்பார் படத்திலும் நடித்துள்ளார்.


Advertisement

Advertisement