• Dec 03 2024

பிக் பாஸ் பற்றி மறைமுகமாக விமர்சித்த விசித்ரா! ஹைலைட் ஆன போட்டோ?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அண்மையில் தான் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் போட்டியில் பங்கு பற்றி இறுதியாக பைனல் வரை சென்றிருந்த போட்டியாளர்களும், வெற்றியாளர்களும் தற்போது பரபரப்பாக பேட்டியளித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நீண்ட  நாட்களுக்குப் பின்பு தன்னுடைய குடும்ப புகைப்படத்துடன் பிக்பாஸை விமர்சித்து கேப்சன் ஒன்றை பதிவிட்டுள்ளார் விசித்திரா.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 வயதை கடந்து, இறுதிவரை சென்ற பிரபலமாக காணப்படுபவர் தான் விசித்ரா.

இவர் டைட்டில் வின்னர் ஆக வருவார் என பலர் எதிர்பார்த்த போதிலும் இறுதி  நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியானார்.

இவ்வாறு பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்திரா, இதுவரையில் எந்தவித பேட்டிகளையும் கொடுக்காமல், தன்னுடைய இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில் மட்டும் அடிக்கடி போஸ்ட் போட்டு கொண்டு  வருகிறார்.


அந்த வகையில் இன்றைய தினம் விசித்ரா வெளியிட்ட போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாக உள்ளது.

அதாவது, நிழலில் இருந்து நிஜத்திற்கு வந்தாச்சு மக்களே தேங்க்யூ சோ மச் எல்லோருடைய சப்போர்ட்டுக்கும், நன்றி.. என அவர் கேப்சன் கொடுத்து பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு, குறித்த போஸ்டை வைரலாகி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement