• Jun 01 2026

விஜயாவின் கண்ணீருக்கு காரணமான அந்த கடிதம்? முத்து எடுத்த சபதம்.. சிற. ஆசையில் பரபரப்பு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மீனாவின் அம்மா வீட்டிற்கு வந்த வக்கீல், விஜயாவின் வீட்டை ஏலத்தில் விடுவதற்காக நீதிமன்றத்திலிருந்து கடிதம் வந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை கூறுகிறார். இதைக் கேட்ட அண்ணாமலையும் விஜயாவும் உடைந்து போகின்றனர். அதிலும் விஜயா கதறி அழுகிறார்.

இதற்கு வேறு வழி இல்லையா என அனைவரும் கேட்க, இரண்டு நாட்களுக்குள் முழு பணத்தையும் கட்டினால் மட்டுமே வீட்டை மீட்க முடியும் என்று வக்கீல் கூறுகிறார். அந்த நேரத்தில் முத்து அங்கு வர, இந்த அதிர்ச்சி தகவலைக் கேட்டு செய்வதறியாமல் நிற்கிறார்.

மேலும், எப்படியும் இந்த இரண்டு நாட்களுக்குள் வீட்டை மீட்க பணத்தை ரெடி பண்ணுவேன் என்று அண்ணாமலைக்கு வாக்கு கொடுக்கிறார். ஆனாலும் விஜயா தனக்கு நம்பிக்கை இல்லை என அழுது புலம்புகிறார்.


அதன் பின்பு முத்து தனக்குத் தெரிந்த பைனான்சியரிடம் சென்று வட்டிக்கு பணம் கேட்கிறார். ஆனால், அவர் முத்துவின் பழைய வாழ்க்கையை நினைவில் வைத்து பணம் தர மறுக்கிறார். இருப்பினும், அவருடன் வேலை பார்த்த ஒருவர், "உனக்கு யாராவது கேரண்டி கொடுத்தால் அவர் பணம் கொடுப்பார்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இதற்காக முத்து தனக்குத் தெரிந்தவர்களிடம் சென்று விஷயத்தைக் கூறுகிறார். ஆனால் யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. இறுதியில், கார் தந்து உதவிய தனது முதலாளியிடம் சென்று நடந்தவற்றைக் கூறுகிறார். அவரும் இதைப் பற்றி யோசிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement