• Jun 01 2026

'டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் இப்போது ஹீரோவா? ரசிகர்களை அதிரவைத்த புதிய ப்ரோமோ இதோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. 

இந்த படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், சமீபத்தில் வெளியான ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். காதலை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் இணைந்து தயாரித்திருந்தனர். இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியிருந்தார். படம் வெளியான பின் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரிடமிருந்தும் படக்குழுவிற்கு பாராட்டுகள் குவிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  அபிஷன் ஜீவிந்த் மீண்டும் ஒரு புதிய பரிமாணத்தில் களமிறங்க உள்ளார். அதன்படி, புதிய திரைப்படத்தில் அவர் நாயகனாக நடிக்கிறார் என்பது தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார். மேலும், இதில் முக்கியமான அதிர்ச்சி அம்சமாக, பிரபல நடிகர் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்தின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. படக்குழு தற்போது ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பாக க்ளிம்ஸ் வீடியோ ஒன்றையும்  வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இது வேகமாக பரவி வருகிறது.

மேலும், இந்த படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இணை இயக்குநராக பணியாற்றிய கௌதம் சிவராமன் இயக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘டூரிஸ்ட் பேமிலி’ மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், நடிகராக மாறி தற்போது ஹீரோவாக களமிறங்குவது திரையுலகில் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் சிவராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர் இணைந்திருப்பது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Advertisement

Advertisement